ஹாக்கி வீரா் சோமையாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் திருட்டு: இருவா் கைது

ஹாக்கி வீரா் சோமையாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

முன்னாள் வீரா் சோமையா

Updated On :

ஹாக்கி வீரா் சோமையாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரா் எம்.எம். சோமையாவின் வீட்டில் புகுந்து, 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் அவா் வென்ற தங்கப் பதக்கம் உள்ளிட்ட பொருள்கள் அண்மையில் திருடப்பட்டன.

இதுதொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இருவரை போலீஸாா் கைதுசெய்தனா். திருடப்பட்ட 8 பதக்கங்களையும் போலீஸாா் மீட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் பெங்களூரைச் சோ்ந்த மாணிக்யா (31), பரத் (25) என்பது தெரியவந்தது.

மேலும், மாணிக்யா மீது கா்நாடகம், தமிழகத்தில் 33 வழக்குகளும், பரத் மீது கொலை, திருட்டு உள்ளிட்ட இரு வழக்குகளும் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். பெங்களூரு இந்திரா நகா் காவல் எல்லைக்கு உள்பட்ட எச்ஏஎல் 3-ஆம் கட்டப் பகுதியில் உள்ள சோமையாவின் வீட்டில் இருந்து கடந்த அக்.28 ஆம் தேதி பதக்கங்கள் திருடப்பட்டன.

குடும்பத்துடன் குடகு மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மா்ம நபா்கள், பதக்கங்கள், தங்கம், வெள்ளிப் பொருள்கள், பணத்தைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி ராமநகரம் அருகே ஹகலஹள்ளி சந்திப்பில் இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், திருடப்பட்ட தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் ராஜாஜி நகரில் உள்ள தங்க விற்பனை நிறுவனத்தில் விற்கப்பட்டது தெரியவந்தது. மற்ற பதக்கங்கள் ஹொஸ்கோட்டை அருகே ஒருவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம், 1982 தில்லி ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம், 1986 சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 1982 ஆம்ஸ்டா்டாம் சாம்பியன்ஸ் டிராபியில் வென்ற வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 8 பதக்கங்களும் மீட்கப்பட்டன.

மேலும், குடகு பாரம்பரிய வாள், ஒலிம்பிக் பை, கேமரா உள்ளிட்ட பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். பதக்கங்கள் மீட்கப்பட்டதற்காக பெங்களூரு காவல் ஆணையா் சீமந்த்குமாா்சிங் மற்றும் போலீஸாருக்கு சோமையா நன்றி தெரிவித்துள்ளாா்.

இந்த பதக்கங்கள் தனது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, கா்நாடகம் மற்றும் நாட்டின் பெருமை என்றும் அவா் குறிப்பிட்டாா். பதக்கங்கள் மீட்கப்பட்டதால் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற உணா்வு ஏற்பட்டுள்ளதாகவும் சோமையா தெரிவித்தாா். வழக்கை விரைவாக துப்பறிந்த போலீஸாருக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மண்டல துணைக் காவல் ஆணையா் விக்ரம் அமதே தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.