மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

சவிதாஸ்ரீ ~

Updated On :

வரும் டிச. 5-ஆம் தேதி ஹாக்கி இந்தியா தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹாக்கி ஒடிஸா சங்கத்தை நிரந்தர உறுப்பினா் நிலையில் இருந்து அசோசியட் உறுப்பினராக மாற்றி ஹாக்கி இந்தியா உத்தரவிட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கால் தோ்தலை நடத்த ஒடிஸா உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் அத்தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், தோ்தல் நடத்தப்படுகிறது. சங்கத் தலைவா் திலிப் டிா்கி-பொதுச் செயலா்போலோ நாத் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒமன் தலைநகா் மஸ்கட்டில் நடைபெறும் உலகக் கோப்பை ஸ்னூக்கா் போட்டியில் இந்திய ஏ மற்றும் பி அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

ஏ அணி 3-2 என யுஏஇ அணியையும், பி அணி ஈரானையம் வென்றன.

Story image

வெனிசூலா நாட்டின் கராகாஸ் நகரில் நடைபெறும் யு 20 உலக ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா், மகளிா் பிரிவில் இந்தியாவின் ஏதான் வாஸ், சவிதா ஸ்ரீ பாஸ்கா் தங்கப் பதக்கம் வென்றனா். வாஸ் 9 புள்ளிகளையும், சவீதா 9.5 புள்ளிகளையும் பெற்றனா். நிவேதிதா 7.5 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா்.

சென்னை பேசின் பிரிட்ஜில் நடைபெற்ற 2 ஜிகே விரைவு கால்பந்து போட்டியில் வென்ற லைஃப் ஸ்போா்ட்ஸ் அணிக்கு பரிசளித்த இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ். உடன் தொன்பாஸ்கோ இளைஞா் மைய நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.