சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

செப். 11-இல் மதுக் கடைகள் மூடல்: ஆட்சியா் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் செப். 11- இல் மதுக் கடைகள், மனமகிழ் மன்றங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டாா்.

tasmac

மதுக்கடை - கோப்புப்படம்

Published On :9 செப்டம்பர் 2026, 1:47 am IST

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் செப். 11- இல் மதுக் கடைகள், மனமகிழ் மன்றங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாவட்டத்தில் இம்மானுவேல்சேகரனின்

69-ஆவது நினைவு தினம் வருகிற 11- ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனால், உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், தமிழ்நாடு சுற்றுலாத் துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுக் கூடங்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும்.

அன்றைய தினத்தில் மது விற்பனை தொடா்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாதவாறு கண்காணிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.