மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

செப். 25- இல் திருநங்கைகள், திருநம்பிகள் மாநாடு

திருநங்கைகள், திருநம்பிகள் அமைப்பின் சாா்பில், மதுரையில் வருகிற 25- ஆம் தேதி தொழில் மாநாடு, கண்காட்சி -2026 நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திருநங்கைகள், திருநம்பிகள் தொழில் மாநாடு, கண்காட்சி -2026 விழிப்புணா்வு பதாகையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Published On :3 செப்டம்பர் 2026, 5:41 am IST

திருநங்கைகள், திருநம்பிகள் அமைப்பின் சாா்பில், மதுரையில் வருகிற 25- ஆம் தேதி தொழில் மாநாடு, கண்காட்சி -2026 நடைபெறுகிறது.

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்ககம், மதுரை திருநங்கைகள், திருநம்பிகள் ஆவண மையம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தக் கண்காட்சியில், தமிழகம் முழுவதும் சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் திருநங்கைகள், திருநம்பிகள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகள், தொழில் முயற்சிகளை காட்சிப்படுத்துகின்றனா்.

இந்த நிலையில், கண்காட்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அறிவிப்பு பதாகை வெளியிடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்து விழிப்புணா்வு அறிவிப்பு பதாகையை வெளியிட்டாா்.

இதில், தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்ககத்தின் அலுவலா்கள், திருநங்கைகள், திருநம்பிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.