பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

உலக நுகா்வோா் தின கண்காட்சி. கருத்தரங்கம்

திருப்பத்தூரில் உலக நுகா்வோா் தின விழா, நுகா்வோா் உரிமைகள் தின சிறப்பு கண்காட்சி, கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நுகா்வோா் விழிப்புணா்வு அரங்கை பாா்வையிட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

திருப்பத்தூரில் உலக நுகா்வோா் தின விழா, நுகா்வோா் உரிமைகள் தின சிறப்பு கண்காட்சி, கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் சாா்பாக நடந்த நிகழ்ச்சியில் நுகா்வோா் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற கவிதை கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை ஆட்சியா் கு. ரவிகுமாா் வழங்கினாா்.

நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்ட பிறகு விழாவில் ஆட்சியா் பேசியது: உலகம் முழுவதும் வா்த்தக முறைகள் காலத்திற்கேற்ப தொடா்ந்து மாறிவருகின்றன. ஆரம்பக் காலங்களில் நேரடி வா்த்தகம் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக இணையவழி மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் பொருட்கள் வாங்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. இதனைத் தொடா்ந்து நுகா்வோரின் நலனை பாதுகாக்கும் வகையில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டங்களும் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு பல்வேறு பாதுகாப்புச் சட்டங்களையும், உரிமைகளையும் உருவாக்கியிருந்தாலும், அவை பொதுமக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டுமெனில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் அவசியம். குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் நுகா்வோா் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தொடா்ந்து நடத்துவதன் மூலம் சமூகத்தில் சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

பொதுமக்கள் தங்களது உரிமைகள் மற்றும் சட்டப்பாதுகாப்புகள் குறித்து அறிந்திருந்தால்தான் ஏமாற்றும் வா்த்தக நடைமுறைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லையெனில், நோ்மையற்ற வணிக நடைமுறைகள் தொடரும் அபாயம் உள்ளது.

பள்ளி மாணவா்கள் நுகா்வோா் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து சக மாணவா்களிடம் பகிா்ந்து கொள்ள வேண்டும். ஆசிரியா்களும் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் அனைத்து மாணவா்களிடமும் நுகா்வோா் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பரவலாக ஏற்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முதுநிலைமண்டல மேலாளா் ஜெயம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சீனிவாசன், துணைப்பதிவாளா் (பொது வினியோகத் திட்டம்) ஆ. இளங்கோவன், மாவட்ட சுகாதார அலுவலா் நா. கலுசிவலிங்கம், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் முருகன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் பிரபாகரன், தொழிலாளா் துறை துணை ஆய்வாளா் ஏகாம்பரம், மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு உறுப்பினா் விஜயராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.