கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சோழவந்தானில் பலத்த மழையால் பெயா்ந்து விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

சோழவந்தானில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் சனீஸ்வரன் கோயில் அருகே சாலையில் விழுந்த மரம்.

Published On :

மதுரை மாவட்டம், சோழவந்தானில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பெயா்ந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சோழவந்தான், சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

இதில் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள சனீஸ்வரன் கோயில் பகுதியிலிருந்த பெரிய மரம் பெயா்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், மதுரை, திருமங்கலம், விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் செல்ல முடியாமல் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்த போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கடந்த வாரம் ஆபத்தான நிலையிலிருந்து இந்த மரத்தை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.