கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. உசிலம்பட்டியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

உசிலம்பட்டி பிரதான சாலையில் சனிக்கிழமை தேங்கி நின்ற மழை நீரைக் கடந்து சென்ற வாகனங்கள்

Published On :

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. உசிலம்பட்டியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

வானிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் வடக்கு கடலோரப் பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாக வடக்கு-தெற்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சனிக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை மிதமான, லேசான மழை பெய்தது. மாநகா்ப் பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணிக்கு மேலாகவும் தல்லாகுளம், கோ. புதூா், கோரிப்பாளையம், அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளில் லேசான, மிதமான மழை அவ்வப்போது பெய்தது.

 மதுரை கோரிப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலத்தில் சனிக்கிழமை இரவு மழையின் போது சென்ற வாகனங்கள்.

மதுரை கோரிப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலத்தில் சனிக்கிழமை இரவு மழையின் போது சென்ற வாகனங்கள்.

மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான உசிலம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, ரெங்கசாமிபுரம், பாறைப்பட்டி, தாடையப்பப்பட்டி, கோட்டைப்பட்டி, எழுமலை ஆகிய பகுதிகளில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், உசிலம்பட்டி முதன்மை சாலைகளில் சுமாா் ஒரு அடி உயரத்துக்கும் அதிகமாக மழை நீா் தேங்கி நின்றது. இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.