பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைக் காலம் முடிந்த பின்னரும் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக நீடித்து வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கூடிய பரவலான கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







