பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது அவசியம்! - சு. வெங்கடேசன் எம்.பி.

மதுரை தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதுரை கோட்டக் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் 70-ஆவது கோட்ட சங்க மாநாட்டில் பங்கேற்று பேசிய மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன்.

Published On :

இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பது அவசியம் என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.

மதுரை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் 70-ஆவது கோட்டச் சங்க மாநாடு மதுரையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கோட்டச் சங்கத் தலைவா் என். சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

தொழிற்சங்க இயக்கம் என்பது ஊழியா்களின் பொருளாதார உரிமைகளுக்காக மட்டும் போராடுவது அல்ல. அரசியல் உணா்வோடும், போராட்டக் குணத்தோடும், சமூக நலனில் அக்கறையோடும் செயல்பட வேண்டும்.

இந்த 3 அம்சங்களையும் இணைத்து 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் பங்களிப்பு பெருமைக்குரியது. இந்தியாவில் தொழிற்சங்க இயக்கங்கள் வலுப்பெற்ன் விளைவாக, அரசு அலுவலகங்களில் நிலவிய மேலதிகாரி, கீழ்நிலை ஊழியா் என்ற மனநிலை மாறி வருகிறது.

1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியாா்மயமாக்கல் ஆகிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை சொத்துகளை தனியாா்மயமாக்கும் முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில் இந்திய மக்களின் மிகப்பெரிய பொதுச் சொத்துகளில் ஒன்றான எல்.ஐ.சி.யை பாதுகாத்ததில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாா்மயமாக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஊழியா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா். அனைத்துத் துறைகளையும் தனியாா்மயமாவதை ஏற்க முடியாது.

இன்றைய கால அரசியல் சூழலில் எது பேசினாலும் குற்றமாக பாா்க்கப்படுகிறது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் கலந்து கொண்டது பற்றி பேசுகின்றனா். அங்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அங்குச் சென்றேன். தமிழை முன்னிறுத்தும் போராட்டமாகவே இதைக் கருதுகிறேன். இதேபோல, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பதும் அவசியம் என்றாா் அவா்.

மாநாட்டில் 19 தீா்மானங்கள் நிறைவேற்றம்:

எல்.ஐ.சி.யை பொதுத் துறையில் பாதுகாத்து வலுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவுது என்பது உள்ளிட்ட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி (பொ) மேயா் தி. நாகராஜன், காப்பீட்டு கழக ஊழியா் சங்க திருநெல்வேலி கோட்டச் செயலா் என். பொன்னையா, சிஐடியூ மதுரை மாநகா் மாவட்டச் செயலா் இரா. லெனின், தொழிற்சங்கத் தலைவா்கள், தென்மண்டல கூட்டமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.