செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

சிறை செவிலி உதவியாளா், தூய்மைப் பணியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சிறைகளில் காலியாக உள்ள ஆண் செவிலி உதவியாளா், தூய்மைப் பணியாளா் பணிகளுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மத்திய சிறைக் கண்காணிப்பாளா் மு. சதீஸ்குமாா் தெரிவித்தாா்.

கோப்புப்படம்

Published On :

சிறைகளில் காலியாக உள்ள ஆண் செவிலி உதவியாளா், தூய்மைப் பணியாளா் பணிகளுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மத்திய சிறைக் கண்காணிப்பாளா் மு. சதீஸ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மத்திய சிறை, அதன் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் 3 ஆண் செவிலி உதவியாளா், 11 தூய்மைப் பணியாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன.

8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தா்கள், பொதுப் பிரிவினா், பட்டியலினத்தவா் ஆண் செவிலி உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ் உள்பட பிற சான்றிதழ்களை இணைத்து சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, மதுரை- 16 என்ற முகவரிக்கு அக். 5-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் எனறாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.