
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூா் ஆட்சியா் அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்க...
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசால் பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026 -2027 ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, நிகழாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் தகுதியான மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கடந்த நிதியாண்டில் (2025 -26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ, மாணவிகள் நிகழாண்டில் (2026-27) எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 விண்ணப்பத்தை, மேற்கண்ட இணையதளத்தில் உறுதிசெய்து, புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை பூா்த்திசெய்து, ஆக. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




