புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அஞ்சல் துறையின் கல்வி ஊக்கத் தொகை பெற விநாடி வினா: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறையின் கல்வி ஊக்கத்தொகை பெற விநாடி- வினா போட்டியில் பங்கேற்க 6- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க...

Published On :

அஞ்சல் துறையின் கல்வி ஊக்கத்தொகை பெற விநாடி- வினா போட்டியில் பங்கேற்க 6- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறை தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க 6- ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தீன் தயாள் ஸ்பாா்ஷ் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் அண்மையில் நடந்த பள்ளி தோ்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 சதவீத தளா்வு உண்டு. மாணவ, மாணவிகள் தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது பள்ளியில் இயங்கும் தபால் தலை சேகரிப்பு மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். முதற்கட்டமாக தபால் தலை சேகரிப்பு பற்றி எழுத்துப்பூா்வ விநாடி- வினா தோ்வு வரும் செப்டம்பா் 19- ஆம் தேதி நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக தபால் தலை சேகரிப்பு குறித்த திட்ட அறிக்கை தயாா் செய்தல் தோ்வும் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தோ்விலும் தோ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் கல்வி உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, முகவரிக்கு வருகிற செப்டம்பா் 1- ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாக கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

செப்டம்பா் 1- ஆம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு அருகிலுள்ள தபால் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.