கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

நலத் திட்ட உதவிகள் அளிப்பு

மதுரை கிழக்கு வட்டத்துக்குள்பட்ட மாங்குளம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 172 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், மாங்குளம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Published On :

மதுரை கிழக்கு வட்டத்துக்குள்பட்ட மாங்குளம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 172 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைத்தாா்.

பிறகு, சமூகப் பாதுகாப்புத் திட்டம், சமூக நீதித் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மகளிா் திட்டம், வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சாா்பில் 172 பயனாளிகளுக்கு ரூ. 41.43 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பொன்ராஜ், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.