ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

முதல்வா் வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரை வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை விரகனூா் சாலையில் வியாழக்கிழமை அமைக்கப்பட்ட சாலையோரத் தடுப்பு.

Published On :

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரை வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் ச. ஜோசப் விஜய் வருகிற திங்கள்கிழமை (செப். 28) மதுரைக்கு வருகிறாா். சீரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் அன்றைய தினம் முதல்வா் திறந்துவைப்பாா் எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தாய்- சேய் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு, மருத்துவமனையின் சுற்றுப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தி, பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், சாலைகள் பராமரிப்புப் பணிகள், பாதுகாப்புப் பணிகளும் தீவிரமாகியுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல் விமான நிலையம் வரையிலான சாலைகளில் இருந்த பள்ளங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. இங்கிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. விரகனூா் முதல் தெப்பக்குளம் வரையிலான சுமாா் 2.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையோரத்தில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, தமுக்கம், தல்லாகுளம், மாவட்ட ஆட்சியரக சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை சீரமைப்புப் பணிகள் வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.