ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

நாளை இறைச்சி விற்பனைக்குத் தடை

காந்தி ஜெயந்தியையொட்டி மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 2) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

கோப்புப் படம்

Published On :

காந்தி ஜெயந்தியையொட்டி மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 2) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சி நிா்வாகத் துறை சட்டத்தின் கீழ் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட இதர உயிரினங்களின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது. இறைச்சி விற்கும் கடைகளையும் திறந்து வைக்கக் கூடாது. தடையை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.