ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்: போலீஸ் அதிகாரிகள் சமரசம்
ராமநாதபுரம் நாகநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கொட்டுவதை தடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நாகநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கொட்டுவதை தடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகரில் நாகநாதபுரம் பகுதியில் நகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு நகரில் உள்ள கழிவுநீர் அனைத்தும் கொண்டு வரப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் கழிவுநீரைக் கொட்ட வந்த பட்டினம் காத்தான் ஊராட்சியைச் சேர்ந்த இரு வாகனங்களை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஏ.எஸ்.பி.சர்வேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கழிவுநீர் கொட்டுவதை தாற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து நாகநாதபுரம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன், அகில இந்திய இந்துமகா சபையின் மாவட்டத் தலைவர் ராஜா ஆகியோர் தெரிவித்தது:
சுத்திகரிப்பு நிலையத்தின் மின்மோட்டார் அடிக்கடி பழுதாகி விடுவதால், இப்பகுதியில் உள்ள கிணற்றுக்குள் கழிவு நீர் பரவி துர்நாற்றம் வீசுகிறது. நகரிலுள்ள 15 வார்டுகளின் கழிவு நீரையும் இப்பகுதியிலேயே கொட்டுவதால் கொசுத்தொல்லை அதிகமாகிறது என்றனர்.
பட்டினம்காத்தான் ஊராட்சித் தலைவர் சித்ராமருது, துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலர் நாகேந்திரன் ஆகியோர் கூறியது: கழிவுநீரை இப்பகுதியில் கொட்டுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் கழிவுநீரை தெருவில் விடாமல் அதற்குரிய தொட்டியில் தான் கொட்டப்படுகிறது. சுத்திகரிப்பு நிலைய மின்மோட்டார் அடிக்கடி பழுதாவதாக தெரிவிப்பதால் உடனடியாக மேலும் ஒரு மின் மோட்டார் வாங்கித் தரப்படும். நாகநாதபுரத்தில் கொட்டப்படும் கழிவுநீர் இந்திரா நகர், காட்டூரணி ஆகிய பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு மையங்களுக்கு குழாய் வழியாகவே சென்று கடைசியாக கடலில் கலக்கிறது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






