திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் முதல் திருப்பாலைக்குடி வரை திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.
தற்போது தேசிய நெடுஞ்சாலை எவ்வித பாரமரிப்பும் இன்றி குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது. இவ்வழியாக ராமேசுவரம், ஏர்வாடி செல்லும் வெளி மாநில வாகனங்கள் பழுதாவதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

