ராமேசுவரம் கோயிலில் தேசிய மாணவர் படை தூய்மைப்பணி
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.


ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
ராமேசுவரத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமேசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பிரசாரம் மற்றும் தூய்மைப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தூய்மைப்பணியை இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி தொடக்கி வைத்தார். கோயிலில் பல்வேறு இடங்களில் உள்ள இடங்களை தூய்மைபடுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமை வகித்தார். கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,மேலாளர் முருகேசன், உதவி கோட்ட பொறியாளர் கே.மயில்வாகனன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மதியழகன், நாட்டுநலப்பணித்திட்ட இயக்குநர் ஜெயகாந்தன் என்.சி.சி. அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...