விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கமுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கமுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கழிவு நீர் கால்வாயில் கலப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:56 am

DIN

கமுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கழிவு நீர் கால்வாயில் கலப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகபொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யகுண்டாறு குடிநீர் திட்டத்தின் கீழ் கமுதி குண்டாற்றில் ஆழ்துளைக்கிணறு அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ராட்சத மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு கமுதியில் உள்ள 15 வார்டு பொதுமக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ராஜகம்பீரம் குடநீர் திட்டத்தின் மூலமும் கமுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து முத்துமாரி நகர் பெரியபள்ளிவாசல் செல்லும்சாலை சந்திப்பில் கடந்த 1 வார காலமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணணீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் முழுமையாக குடிநீர்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.குழாய்உடைப்புகளை சரிசெய்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.