/

பலாத்கார வழக்கில் தலைமறைவானவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

ராமநாதபுரத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவானவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:22 am IST

ராமநாதபுரத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவானவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 ராமநாதபுரம்  வெளிப்பட்டினம் பாசிப்பவளக்காரத் தெருவை சேர்ந்தவர் ஜமால் மகன் நியாசுதின். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அபிராமம் நத்தம் திடல் தெருவை சேர்ந்த முனியான்டி மகள் பரமேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். திருமணம் செய்ய மறுத்ததால் அபிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கடந்த 2012 ஏப்ரல் மாதம் முதல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் நியாசுதின் (எ) செய்யது முகமது நியாசுதின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.  இவரை தேடப்படும் குற்றவாளியாகவும் மாவட்ட மகளிர் நீதி மன்றம் அறிவித்தது. இதனையடுத்து நியாசுதின் பற்றிய தகவல் அறிந்தால் பொதுமக்கள் அபிராமம் காவல் நிலையத்தில் (04576-265229, 8300001279) தகவல் தெரிவிக்குமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.