தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:22 am IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  கூட்டுறவுச் சங்க நிர்வாகக்குழு தேர்தலில் முறைகேடுகள் செய்யுமாறு ஊழியர்களை அச்சுறுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுச் சங்க தேர்தல் பார்வையாளராக ஆட்சியரை நியமிக்க வேண்டும். கூட்டுறவுத் தேர்தலின் போது ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கும்  கண்டனம் தெரிவிப்பது உள்லிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  பா.ராஜமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.  அரசு  ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமொழி, கரூவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் முருகேசன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கெங்காதரன்  உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.