தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

இரு தரப்பினரிடையே முன்விரோதம்: பைக்குகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் 6 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே எஸ்.மாரியூர் கிராமத்தில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்துள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:24 am IST

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே எஸ்.மாரியூர் கிராமத்தில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஒரு தரப்பினர், எஸ்.மாரியூர் கிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருப்புளி என்பவருடைய இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்துள்ளனர். 
   இதற்கு பழிக்குப் பழியாக, மற்றொரு தரப்பினர் ஒப்பிலான் சாலை கடைத் தெருவில் சக்திகுமார் என்பவருடைய இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்துள்ளனர். இருவரது வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துவிட்டன. 
   இது குறித்து தகவலறிந்த கீழக்கரை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜோக்கிம் ஜெரி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாகனங்கள் மீது தீ வைத்தவர்கள் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்த ஒரு தரப்பில்  எஸ்.மாரீயூரைச் சேர்ந்தவர்களான வேலுமயில் மகன் சுந்தரமூர்த்தி (22), மாரிக்கிழவன் மகன் அஜித்(19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அதேபோல், மற்றொரு தரப்பில் எஸ்.மாரீயூரைச் சேர்ந்தவர்களான சோலையப்பன் மகன் அஜித் (18), தங்கப்பாண்டி மகன் முனியராஜ், சோலைமுத்து மகன் குமார் (16), குருசாமி மகன் குருராஜா (18) ஆகிய 4 பேர் என மொத்தம் 6 பேர் மீது வழக்குப் பதிந்து, போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.