இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இடத் தகராறு: முதியவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு

நயினார்கோவில் அருகே உள்ள நகரம் கிராமத்தில், உறவினர்களுக்கிடையேயான சொத்து தகராறில்

Updated On :18 ஏப்ரல் 2018, 8:24 am IST

நயினார்கோவில் அருகே உள்ள நகரம் கிராமத்தில், உறவினர்களுக்கிடையேயான சொத்து தகராறில் முதியவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     நயினார்கோவில் ஒன்றியம் நகரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் துரைராஜ் (57). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சுரேஷ் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில், சுரேஷ் மற்றும் குமார் மனைவி சங்கீதா ஆகியோர் இரும்பு கம்பியால் துரைராஜை தாக்கியுள்ளனர். இதில்,  அவர் பலத்த காயமுற்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
    இது குறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் துரைராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸார் சுரேஷ், சங்கீதா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.