சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

முப்படை தலைமைத் தளபதியானார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி!

@SpokespersonMoD

ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி - @SpokespersonMoD

Published On :31 மே 2026, 3:34 pm IST

புது தில்லி : இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை (மே 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.

முப்படை தலைமைத் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் அனில் சௌஹான் சனிக்கிழமையுடன் (மே 30) ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இன்று முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி செய்தியாளர்களுடன் பேசியபோது, “நமது பாதுகாப்புப் படைகள் நமது தேச நலன்களைப் பாதுகாப்பதில் செயலாற்றுத் திறனுடன் திகழ்வதாகவும் நமது நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும், அவர், “பாதுகாப்பு படைகள் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் மாண்புடனும் நாட்டுக்கு சேவையாற்றும் என்று இந்தியக் குடிமக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

கடந்தாண்டில் ஜூலையுடன் ராணுவ துணை தலைமைத் தளபதியாக இருந்து பணி ஓய்வு பெற்ற ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பல உயர் பொறுப்புகளை வகித்து வந்ததுடன், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பல்வேறு முக்கியப் படைப்பிரிவுகளை வழிநடத்தி நீண்ட ராணுவ அனுபவம் கொண்டவர் என்பதும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் (என்.எஸ்.சி.எஸ்.) ராணுவ ஆலோசகராக இருந்த நிலையில், இந்தியாவின் 3-ஆவது முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Summary

Gen Subramani takes charge as India's new Chief of Defence Staff

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.