3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

கடற்படை தலைமைத் தளபதியாக இருந்த தினேஷ் கே.திரிபாதி பணி ஓய்வு பெற்றார்...

Vice Admiral Krishna Swaminathan as next Chief of the Naval Staff

கிருஷ்ணா சுவாமிநாதன் - ஏஎன்ஐ

Published On :31 மே 2026, 3:35 pm IST

புது தில்லி : இந்திய கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை (மே 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடற்படை தலைமைத் தளபதியாக இருந்த தினேஷ் கே.திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய முப்படைகளின் முக்கிய பதவிகளுள் ஒன்றான கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேற்கு மண்டல கடற்படை பிரிவு தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வந்த கிருஷ்ணா சுவாமிநாதன் இந்திய கடற்படையின் 27-ஆவது தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பதவிக்காலம் 2028 டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடரும்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய அவர், “இந்திய கடற்படை தேச நலன்களைப் பாதுகாக்க விழிப்புடன் நிற்கிறது. மேலும், சவாலானதாகவும் கணிக்க முடியாததாகவும் நிலைத்தன்மையற்றதாகவும் நீடிக்கும் பிராந்திய பாதுகாப்பு சூழலில் செம்மையாக பணியில் ஈடுபட்டுள்ளது.

எனது உச்சபட்ச குறிக்கோளாக இந்திய ராணுவத்தை உயர்நிலையில் தயார் நிலையிலும் திறம்படவும் நிலைத்திருக்கச் செய்வதே. அதன்மூலம், தேசப் பாதுகாப்பையும் பொருளாதார நலன்களையும் பாதுகாக்கவும் அதனால் முடியும்” என்றார்.

Summary

Admiral Krishna Swaminathan takes charge as new Navy chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.