எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாம்பன் ரயில் பாலத்தை கடந்தது மிதவைக் கப்பல்

ஒடிசாவில் இருந்து குஜராத் செல்லும் மிதவைக் கப்பல் செவ்வாய்க்கிழமை பாம்பன்  பாலத்தைக் கடந்து சென்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:25 am IST

ஒடிசாவில் இருந்து குஜராத் செல்லும் மிதவைக் கப்பல் செவ்வாய்க்கிழமை பாம்பன்  பாலத்தைக் கடந்து சென்றது.
ஒடிசா மாநிலம் தாம்ரா துறைமுகத்தில் இருந்து குஜராத் மாநிலம் சிக்கா துறைமுகத்திற்கு இக்கப்பல் செல்கிறது.  70 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் கடந்த 15 -ஆம் தேதி பாம்பன் துறைமுகத்திற்கு வந்தது. பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து செல்ல கப்பல் ஊழியர்கள் பாம்பன் துறைமுக அதிகாரிகளிடம் மனு அளித்தனர். 
இதனையடுத்து, பாம்பன் ரயில் பாலம் திறக்க ரயில்வே நிர்வாகத்திடம் துறைமுகம் சார்பில் மனு அளித்திருந்தனர். இதனை ஏற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாம்பன் ரயில் பாலம் திறக்க அனுமதி பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டது. அதன் வழியாக குஜராத் மாநிலம் சிக்கா துறைமுகத்திற்கு கப்பல் சென்றது.  பிரமாண்ட கப்பல் பாம்பன் பாலத்தை கடத்து சென்றதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.