இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதை வழங்கினார்.
2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 25) நடைபெற்றது. இதில் பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று விருதுகளை வழங்கினார்.
அதில், இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார்.
A high recognition for a true champion ð
— BCCI (@BCCI) May 25, 2026
President of India, Smt Droupadi Murmuji (@rashtrapatibhvn) confers #TeamIndia captain Harmanpreet Kaur (@ImHarmanpreet) with the prestigious Padma Shri award ðpic.twitter.com/JBSf3ys2Y8
கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய அணிக்காக ஹர்மன்பிரீத் கௌர் 164 ஒருநாள் மற்றும் 195 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 4541 ரன்கள் மற்றும் 3991 ரன்கள் எடுத்துள்ளார்.
எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை ஹர்மன்பிரீத் கௌர் கேப்டனாக வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.
Summary
President Droupadi Murmu presented the Padma Shri award to Indian women's team captain Harmanpreet Kaur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை தோல்வியை மறக்க லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி உதவும்: ஹர்மன்பிரீத் கௌர்

ஆசிய போட்டிக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் ஹர்மன்பிரீத் கௌர்!

தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! விருது பெற்ற தமிழர்களின் பட்டியல்!







