ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுகள் பெற்றுக்கொண்டவர்கள் பட்டியல் குறித்து...

News image

குடியரசுத் தலைவரிடம் பத்ம ஸ்ரீ விருது பெறும் எச்.வி. ஹண்டே, சிவசங்கரி - பிஐபி

Updated On :25 மே 2026, 7:16 pm IST

மருத்துவத் துறையில் முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் எழுத்தாளர் சிவசங்கரிக்கு பத்ம ஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (மே 25) வழங்கினார்.

இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜய்குமாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மறைந்த பழங்குடியின ஓவியர் கிட்னா கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.

புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற சிலம்பக் கலைஞர் கே. பழநிவேலும் குடியரசுத் தலைவரிடம் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார்.

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று விருதுகளை வழங்கினார்.

இதன்படி, தமிழகத்தில் மருத்துவத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட டாக்டர் கல்லிப்பட்டி ராமசாமி

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட டாக்டர் கல்லிப்பட்டி ராமசாமி - பிஐபி

மூத்த மருத்துவர், எழுத்தாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் எச். வி. ஹண்டேக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.

வீரப்பனுக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகளில் செயலாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே. விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட கே. விஜயகுமார்

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட கே. விஜயகுமார் - பிஐபி

புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற சிலம்பக் கலைஞர் கே. பழநிவேலு, குடியரசுத் தலைவரிடம் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார்.

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட பழநிவேல்

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட பழநிவேல் - பிஐபி

நீலகிரி ஆலு குறும்பர் சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற 'அகில் பொட்டு' ஓவியக் கலைஞர் ஆர். கிருஷ்ணன் கிட்னாவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை அவரின் மனைவி பெற்றுக்கொண்டார்.

விருது பெற்றுக்கொண்ட ஆர். கிருஷ்ணன் கிட்னா மனைவி

விருது பெற்றுக்கொண்ட ஆர். கிருஷ்ணன் கிட்னா மனைவி - பிஐபி

50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணியாற்றிய மூத்த எழுத்தாளர் சிவசங்கரி, பத்ம ஸ்ரீ விருது பெற்றுக்கொண்டார்.

சமூக வானொலியின் தந்தை' என்று அழைக்கப்படும் மூத்த வானொலி ஒலிபரப்பாளரும், 300-க்கும் மேற்பட்ட சமூக வானொலி நிலையங்களை நிறுவ உதவியவருமான டாக்டர் ஆர். ஸ்ரீதர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார்.

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட டாக்டர் ஆர். ஸ்ரீதர்

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட டாக்டர் ஆர். ஸ்ரீதர் - பிஐபி

55 ஆண்டுகளுக்கும் மேலாகப் பண் இசையைப் பாதுகாத்து, சிவபெருமானின் புகழ்பாடும் திருமுறைகளை உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழகத்தின் சிறந்த ஓதுவார் கலைஞர் என். சுவாமிநாதனுக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட என். சுவாமிநான்

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட என். சுவாமிநான் - பிஐபி

Summary

President Murmu presents Padma Awards 2026 HV Hande, Sivasankari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.