கமுதி அருகே முன்விரோதத்தில் சனிக்கிழமை வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கமுதி அடுத்துள்ள பெருநாழியைச் சேர்ந்தவர் பால்சாமி நாடார் மகன் ராமச்சந்திரன் (48), இவருக்கும் பெருநாழி அருகில் உள்ள சண்முகாபுரம் கிராமத்தினருக்கும் கோயில் பாதை பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து ராமச்சந்திரன் மற்றும் சண்முகாபுரம் கிராமத்தினர் தனித்தனியே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை சண்முகாபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை மகன் குணசீலன், முத்துமுனியான்டி மகன் முனியசாமி, சோலை மகன் ஆதிமுத்து ஆகியோர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான வைக்கோல் படப்புகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் பெருநாழி போலீஸார், குணசீலன், முனியசாமி, ஆதிமுத்து ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.