கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

கூலித் தொழிலாளியை சாதியை சொல்லி திட்டியவருக்கு 5  ஆண்டுகள் சிறை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

ராமநாதபுரம்  மாவட்டம்  கமுதி  அருகேயுள்ள பெருநாழியில் கூலித் தொழிலாளியை சாதியைச் சொல்லி திட்டியவருக்கு 5 ஆண்டுகள்

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:13 am IST

ராமநாதபுரம்  மாவட்டம்  கமுதி  அருகேயுள்ள பெருநாழியில் கூலித் தொழிலாளியை சாதியைச் சொல்லி திட்டியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியில் இந்திரா நகரில் குடியிருந்து வருபவர் நல்லையா மகன் கடற்கரை(62). இவர் பெருநாழியில் தனியார் திருமண மண்டபத்தில் பணி செய்து விட்டு அதற்கான கூலித்தொகையை அம்மண்டப மேலாளரான கருப்புச்சாமி மகன் காளீஸ்வரன்(31) என்பவரிடம் கேட்டாராம். அப்போது காளீஸ்வரன் சாதியை சொல்லி திட்டியதுடன் அவரை கையால் தாக்கியதில் தலையிலும் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி நடந்தது. இது தொடர்பாக கடற்கரை அளித்த புகாரின் பேரில் பெருநாழி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து காளிஸ்வரனை கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக பி.காமராஜ் ஆஜரானார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் காளீஸ்வரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமாக ரூ.16 ஆயிரமும் செலுத்துமாறும் தீர்ப்பளித்தார். இத்தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட கடற்கரைக்கு ரூ.15 ஆயிரத்தை வழங்குமாறும் மீதம் உள்ள ரூ.1000த்தை அரசுக்கு செலுத்தி விட வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.