அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

செல்லிடப்பேசியில் தகவல்களைத் திருடி: இளம்பெண்களை மிரட்டிய இளைஞர் கைது:  வழக்கு விசாரணை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம்: ராமநாதபுரம் டி.ஐ.ஜி. உத்தரவு

செல்லிடப்பேசியில் செயலி மூலம் தகவல்களை திருடி இளம்பெண்களை மிரட்டிய இளைஞர் கைதான வழக்கை தேவிபட்டிணம்

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:12 am IST

செல்லிடப்பேசியில் செயலி மூலம் தகவல்களை திருடி இளம்பெண்களை மிரட்டிய இளைஞர் கைதான வழக்கை தேவிபட்டிணம் காவல் நிலையத்திலிருந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி டி.ஐ.ஜி.என்.காமினி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே தாமரையூரணி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்(24). இவர் தனது  உறவுக்காரப் பெண்கள் சிலரின் செல்லிடப்பேசியில் புதிய செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் அவர்களது அந்தரங்க விபரங்களைத் தெரிந்து கொண்டுள்ளார். அதை முகநூலில் பதிவு செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். 
இது குறித்து அதே ஊரைச் சேர்ந்த சக்தி மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் தேவிபட்டிணம் போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.என்.காமினி வியாழக்கிழமை கூறியது:
தேவிபட்டிணம் அருகே தாமரையூரணி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார் தனது உறவுக்காரப் பெண்கள் சிலரின் செல்லிடப்பேசியில் புதிய செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தகவல்களை திரட்டி மிரட்டியிருக்கிறார். இதில் இளைஞர் கைது செய்யப்பட்டார். இருந்தாலும், இதில் பாதிக்கப்பட்டது பெண்கள் என்பதால் இவ்வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் ஆய்வாளர் விசாரித்தால் மேலும் சில உண்மைகள் தெரிய வரும். இந்த விவகாரத்தில் பெண்கள் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் செவல்பட்டி அருகேயுள்ள அச்சராம்பட்டி என்ற கிராமத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சிலர் மானபங்கப்படுத்தி கொலை செய்திருப்பது கவலையளிக்கிறது.  
பெண்கள், குழந்தைகளுக்கு  எதிராகவும் குற்றங்கள் புரிபவர்களை இனம் கண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.