தொண்டியில் கடற்கரை பூங்கா அமைக்கப்படுமா?
திருவாடானை அருகே தொண்டியில் மக்கள் பொழுது போக்கிற்காக கடற்கரை பூங்கா அமைக்கப்படவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை அருகே தொண்டியில் மக்கள் பொழுது போக்கிற்காக கடற்கரை பூங்கா அமைக்கப்படவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் உள்ள தொண்டி வளர்ந்து வரும் கடற்கரை நகரமாகும். இங்கு மீன் பிடி தொழில், விவசாயம், வர்த்தகம் என பல்வேறு தொழில் செய்து வரும் மக்கள் வசித்து வருகின்றனர். தொண்டி என்றாலே துறைமுகம், கடற்கரை என அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இங்கு இருப்பதோ ஒரே ஒரு படகு நிறுத்தம் மட்டும்தான். இங்குள்ள பாலத்தில் தான் மக்கள் மாலை நேரங்களை கழிப்பர். இப்பகுதி மட்டுமல்லாது வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் தொண்டி கடற்கரைக்கு வருகின்றனர். தொண்டி கடல் பகுதி அலையே இல்லாத ரம்மியமான கடற்கரை ஆகும். எனவே இங்கு ஒரு கடற்கரை பூங்கா அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வர்த்தக சங்க தலைவர் சகுபர் சாதிக் கூறியது: தொண்டியில் பல்வேறு வர்த்தக, தொழில் நிறுவனங்கள் இருந்தாலும் பொழுது போக்கிற்கு என்று ஒரு இடம் இல்லை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மாலை நேரத்தில் தங்களது பொழுதை இனிதாக கழிக்க இங்கு ஓர் கடற்கரை பூங்கா அமைக்க வேண்டும். இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே சம்பந்தபட்ட துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து கடற்கரை பூங்கா அமைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

