
போலீஸார் விசாரணையில் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
முதுகுளத்தூரில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணையின் போது இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரம உதவி
முதுகுளத்தூரில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணையின் போது இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரம உதவி வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகில் மகாதேவன் என்பவர் வீட்டில் கடந்த 3 ஆம் தேதி நகை, பணம் திருடு போனது. இது தொடர்பாக மணிகண்டன்(27) என்பவரை போலீஸார் இரவு விசாரணைக்கு அழைத்து சென்றனர். மறுநாள் காலையில் அவர் இறந்து விட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணிகண்டனின் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் 2 நாள்களாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமரச பேச்சு வார்த்தைக்கு பிறகு மணிகண்டனின் உடலை உறவினர் பெற்றுச் சென்றனர்.
இது தொடர்பாக மணிகண்டனின் குடும்பத்தினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவல்துறை யினரால் இறந்த மணிகண்டன் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இதற்கு காரணமான முதுகுளத்தூர் காவல் நிலைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர் சாவு குறித்து உயர் மட்ட விசாரணை கோரி 7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அப்போது மாவட்ட செயலாளர் வி.காசிநாதத்துரை, தாலுகா செயலாளர் வி.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




