கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் அழகு வள்ளியம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு ஆடி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் அழகு வள்ளியம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு ஆடி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம், பித்தளை அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை கோவிலாங்குளம், கமுதி, சாயல்குடி, பெருநாழி, முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

