முதியவர் வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது
முதுகுளத்தூரில் முதியவர் வீட்டில் நகை, பணத்தை திருடிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூரில் முதியவர் வீட்டில் நகை, பணத்தை திருடிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை 2-வது தெருவில் வசித்து வருபவர் மகாதேவன் (74). இவரது வீட்டிலிருந்து 16 பவுன் நகை, ரூ. 13 ஆயிரம் ரொக்கம், 2 ஏடிஎம் அட்டைகளை மர்ம நபர்கள் கடந்த 3-ஆம் தேதி இரவில் திருடிச் சென்றனர். இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் மகாதேவன் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், முதுகுளத்தூரைச் சேர்ந்த மனோகரன் மகன் காளீஸ்வரன் (30) தான் மகாதேவன் வீட்டில் திருடினார் என்பது தெரியவந்தது.
அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, காளீஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

