மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பிலிப்பின்ஸில் ஒன்றோடு ஒன்று மோதிய ராணுவ விமானங்கள்! 4 விமானிகள் பலி!

பிலிப்பின்ஸ் விமானப் படைக்குச் சொந்தமான ராணுவ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது குறித்து...

Philippine air force planes collide

பிலிப்பின்ஸில் ஒன்றோடு ஒன்று மோதிய போர் விமானங்கள்... - Video crop

Updated On :

பிலிப்பின்ஸ் விமானப் படைக்குச் சொந்தமான ராணுவ விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில், 4 விமானிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டின் படாங்காஸ் சௌத் மாகாணத்தில் உள்ள ஃபெர்னாண்டோ விமானப் படைத் தளத்தில் இன்று (அக். 24) மதியம் பயிற்சியில் ஈடுபட்ட எஸ்எஃப்-260 ரக ராணுவ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், அந்த விமானங்களின் விமானிகள் 4 பேரும் பலியானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான உயரத்தில் பறந்தபோது ஏற்பட்ட இந்த விபத்தில், நல்வாய்ப்பாகத் தரையிலிருந்த பார்வையாளர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, பிலிப்பின்ஸ் அரசு மற்றும் விமானப்படையின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, உடனடியாக வானில் பறந்துகொண்டிருந்த மற்ற பயிற்சி விமானங்கள் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, நிதிப் பற்றாக்குறையில் தவித்து வரும் பிலிப்பின்ஸ் ராணுவத்துக்கு இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. மேலும், எஸ்எஃப்-260 ரக போர் விமானங்களை இத்தாலியிடம் இருந்து பிலிப்பின்ஸ் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Four pilots were killed when military planes belonging to the Philippine Air Force collided during a training exercise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.