
தில்லி விமான நிலையத்தில் 10 ராணுவ ட்ரோன்கள் பறிமுதல்
புது தில்லி விமான நிலையத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான 10 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன் பாகங்கள்
புது தில்லி விமான நிலையத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான 10 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரூ.1.03 கோடி மதிப்புடைய இந்த ட்ரோன்கள், ஹாங்காங்கில் இருந்து வியத்நாம் வழியாக செப். 25-ஆம் தேதி தில்லி வந்த 3 இந்தியப் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையில், ட்ரோன்கள் தொழில்முறைப் பயன்பாட்டுக்கானவை என்பதும், அவற்றில் வெப்பப் படமெடுக்கும் கருவிகள் மற்றும் லேசா் தொலைவு அளவீட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவை ராணுவம் அல்லது பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் தரத்திலான ட்ரோன்கள் என்றும், இவற்றை எடுத்துச் செல்ல விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சுங்கத் துறைச் சட்டம் 1962-இன் கீழ் அந்த 3 பயணிகளும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






