மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

யுவன் இசையில் ஜோஜு ஜார்ஜின் பரிபாடி..! முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல்!

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரிபாடி படத்தினைக் குறித்து...

Paripad movie poster

பரிபாடி படத்தின் போஸ்டர் - படம்: இன்ஸ்டா / காவ்யா ஃபிலிம் கம்பெனி

Updated On :

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்துவரும் பரிபாடி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்துடன் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடலும் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி, நடித்த திரைப்படமான பணி பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இந்தப் படம் ரூ. 15 கோடியில் உருவாகி, ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவதாக பரிபாடி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைக்காட்சிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

இப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் முதல் பாடலும் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் ஜோஜு ஜார்ஜின் சொந்த ஊரான திரிசூரைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலக்குடி எனும் ஊரைப் பற்றியதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தை வேணு குன்னப்பிள்ளை சார்பாக காவ்யா ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இந்தப் படம் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் நிலையில் இருக்கிறது.

Summary

Paripadi: First look and Yuvan Shankar Raja song from Joju George film out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.