சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆடி அமாவாசை திருவிழா: மதுரை-ராமேசுவரத்துக்கு நாளை சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை-ராமேசுவரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை-ராமேசுவரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ராமேசுவரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயிலின் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. 
இந்த ரயில் வெள்ளிக்கிழமை (ஆக.10) இரவு 10.40 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிலைமான், திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் வழியாக  நள்ளிரவு 2 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். 
மற்றொரு ரயில் ராமேசுவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (ஆக. 10) இரவு 11 மணிக்குப் புறப்பட்டு மதுரைக்கு நள்ளிரவு 2.15 மணிக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.