
பராமரிப்பு பணிகள்: ரயில்கள் நேரத்தில் மாற்றம்
மானாமதுரை-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மானாமதுரை-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மானாமதுரை-ராமேசுவரம் இடையே நடைபெற்று வரும் ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரயில் (எண். 56829/56830) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 9) மட்டும் ராமேசுவரம்-மானாமதுரை இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் (எண்.56721/56722) வியாழக்கிழமை (ஆகஸ்ட்9) மட்டும் மானாமதுரை-ராமேசுவரம் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






