கமுதி அருகே பூச்சொரிதல் விழா, ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை 1008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
அபிராமத்தில் சுயம்புலிங்க துர்க்கை அம்மனுக்கு 28 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா, ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, 1008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. முன்னதாக, துர்க்கை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்குப் பூஜையில் கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.