பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கமுதியில் கழிவுநீர் வாய்க்காலை அழித்து வாகன நிறுத்துமிடம்: சமூக ஆர்வலர்கள் புகார்

கமுதியில் கழிவுநீர் வாய்க்கால்களை அழித்து வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றியுள்ளதாக  புகார் எழுந்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கமுதியில் கழிவுநீர் வாய்க்கால்களை அழித்து வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றியுள்ளதாக  புகார் எழுந்துள்ளது.
கமுதி, கண்ணார்பட்டி, குண்டாறு திரும்பும் தெரு, பேருந்து நிலையம், செட்டி ஊருணி உள்பட கமுதியில் 80 சதவீதம் இடங்களில் கழிவுநீர், மழைநீர் செல்ல வாய்க்கால் வசதி, பேரூராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டது. 
இருந்தபோதிலும் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து, குண்டாறு திரும்பும் தெரு, எட்டுக்கண் பாலம் வரை சாலையோரங்களில் அமைக்கபட்ட வாய்க்கால்களை ஆக்கிரமித்து அழித்து, வீடுகளுக்கு முன் வாகனங்கள் நிறுத்துமிடமாக உருமாற்றியுள்ளனர். 
இதனால் மழை காலங்களில் மட்டுமல்லாது, வீடுகள், கடைகளிலிருந்து கழிவுநீர் செல்ல முடியாமல், வியாபாரிகள், பொதுமக்கள் கழிவுநீரை சாலையில் கொட்டிவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமுதியில் 60 சதவீதம் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் அழிந்துள்ளன. 
எனவே பேரூராட்சி நிர்வாகம் இதனை மீட்டெடுத்து, மழைநீர், கழிவுநீர் சாலையோரங்கள், பேருந்து நிறுத்தம் பகுதியில்  தேங்காத வகையில் கமுதி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கமுதி பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.