
கமுதியில் கால்நடைச் சந்தையால் போக்குவரத்து நெரிசல்
கமுதியில் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கும் கால்நடைச் சந்தையால் சாலையோரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கமுதியில் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கும் கால்நடைச் சந்தையால் சாலையோரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கமுதி பேரூராட்சி அலுவலக பகுதியிலும், பஜார்களிலும் கோழி மற்றும் கால்நடைச் சந்தை நடைபெற்றதால் துர்நாற்றம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வாரச் சந்தை வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் மேற்கூரை வசதியுடன் கால்நடைச் சந்தை அமைக்கப்பட்டது.
பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ., தொலைவில் உள்ளதால், வியாபாரிகள், பொதுமக்கள் கால்நடை சந்தைக்கு வருவது குறைந்து வந்தது. இதனால் கால்நடைச் சந்தை பயன்பாடின்றி, மேற்கூரை சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தற்போது மீண்டும் சாலையோரங்கள், பஜார்களில் கால்நடைச் சந்தை நடைபெறுவதால், அப்பகுதி வியாபாரிகள் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் இறைச்சி கடைகளும் சாலையோரத்தில் திறந்த வெளியில் செயல்படுவதால், துர்நாற்றத்தின் பிடியில் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிபடுகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி வாரசந்தை வளாகத்தில் உள்ள கால்நடை சந்தையை சீரமைக்கவும், பேரூராட்சி அருகே நடைபெறும் கோழி, கால்நடைச் சந்தை செயல்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





