‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பார்த்திபனூரில் குண்டும் குழியுமான சாலைகளை  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் சேதமடைந்து குண்டும் குழியுமாக  மாறிய சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் சேதமடைந்து குண்டும் குழியுமாக  மாறிய சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   பார்த்திபனூர் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிவாசல் வழியாக கமுதி, அருப்புக்கோட்டை  செல்லும் சாலைகள் மற்றும் காய்கறி கடைகள் மற்றும் பூக்கடை அமைந்துள்ள சாலைகள் 
முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. 
இதனால் அச்சாலையில் செல்லும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இரவு நேரங்களில் அச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பரமக்குடி வட்டத்தில் அதிக அளவில் சுற்றுப்புற கிராம மக்கள் வந்துசெல்லும் ஊராக பார்த்திபனூர் பேரூராட்சி உள்ளது. எனவே பார்த்திபனூர் பகுதி மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.