வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

தமிழகத்தில் முன்னோடி மையமாக தேவிப்பட்டினம் சத்துணவுக் கூடம் தேர்வு: ஜெயலலிதாவின் நிதியுதவியில் கட்டப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தாயார் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் ஏற்படுத்திய அன்னை சந்தியா நினைவு

Updated On :14 ஜூலை 2018, 1:33 am IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தாயார் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் ஏற்படுத்திய அன்னை சந்தியா நினைவு சத்துணவு மையம், மாநில அளவில் முன்னோடி சத்துணவு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தனியார் மழலையர் பள்ளிகளையும் விஞ்சும் வகையில் இங்கு ஸ்மார்ட் போர்டு வகுப்பறை, புரொஜக்டர் கருவி, கல்விக்கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த சத்துணவு மையம் தமிழக அளவில் முன்னோடி சத்துணவு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்டத் திட்ட அலுவலர் பி.கிருஷ்ணவேணி கூறியதாவது: தேவிபட்டினம் அருகே உள்ள சக்கரவாளநல்லூர் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பிறந்த ஊர் என சொல்லப்படுகிறது. எனவே, இங்கு ஜெயலலிதா தனது தாயார் நினைவாக, சொந்த நிதி ரூ.50 ஆயிரத்தை அளித்து, அன்னை சந்தியா நினைவு சத்துணவுக் கூடத்தை 1984-இல் ஏற்படுத்தினார். இம்மையம்  தமிழகத்தில் உள்ள 56 ஆயிரம் சத்துணவு மையங்களில், முன்னோடி சத்துணவு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.