ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மாதம் 9 ஆம் தேதி பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் கூட்டம் ஒன்றியம் வாரியாக நடத்தப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திக்குறிப்பு விபரம்: பொதுவிநியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டமானது இம்மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறும். ராமநாதபுரம் ஒன்றியம் இளமனூர் கிராம நிர்வாக அலுவலர் சாவடியிலும், ராமேசுவரம் ஒன்றியம் காரன்காட்டிலும், திருவாடானை ஒன்றியம் கீழக்கோட்டையிலும், முதுகுளத்தூர் ஒன்றியம் சித்ரன்குடியிலும், கடலாடி ஒன்றியம் அடஞ்சேரியிலும், கமுதி ஒன்றியம் பேரையூரிலும், கீழக்கரை ஒன்றியம் புக்குளத்திலும் இக்கூட்டம் நடைபெறுகிறது. அப்போது பொதுமக்கள் பொதுவிநியோகத்திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம் போன்ற குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்! திருச்சி சிவா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


