உயர் மின் அழுத்த வயர் சேதம்: இருளில் மூழ்கியது ராமேசுவரம்
மண்பத்தில் இருந்து பாம்பன் பகுதி வரையில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள உயர் மின் அழுத்த வயர் சேதமடைந்துள்ளதால் ராமேசுவரம் பகுதியில்


மண்பத்தில் இருந்து பாம்பன் பகுதி வரையில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள உயர் மின் அழுத்த வயர் சேதமடைந்துள்ளதால் ராமேசுவரம் பகுதியில் மின்தடை நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளடக்கிய தீவுப்பகுதிக்கு உயர் மின் அழுத்த வயர் பூமிக்கடியில் பாம்பன் வரையில் புதைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் இருந்து மின் கம்பம் மூலம் ராமேசுவரம் மின் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து பிரிக்கப்பட்டு அனைத்து பகுதிக்கு மின் விநியோகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு மேல் மிதமான சாரல் மழை பெய்யது. இதனையடுத்து உடனே மின்தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் ஏற்பட்ட மின்தடை காரணமாக குழந்தைகள், முதியவர்கள் தூக்கம் இன்றி தவித்தனர்.
பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு மின்சாரம் வந்தது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இரவு 8 மணி வரையில் மின்விநியோகம் இல்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்ட போது அவர் தெரிவித்தது:
மண்பத்தில் இருந்து பாம்பன் பகுதி வரையில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள உயர் மின் அழுத்த வயர் சேதமடைந்துள்ளது.
இதனை சீரமைக்க சென்னையில் இருந்து பணியாளர்கள் வர வேண்டும் என்பதால் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...