மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கமுதியில் இருசக்கர வாகன விபத்தில்  பள்ளி மாணவர் சாவு

கமுதியில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:26 pm

DIN

கமுதியில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
கமுதி கண்ணார்பட்டியை சேர்ந்த மலைச்சாமி மகன் அருண்பாண்டி (16). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களான முதல்நாட்டை சேர்ந்த நம்புமணி (16), கண்ணார்பட்டியை சேர்ந்த நவீன் (16), அபிராமம் காட்டு சோடனேந்தலை சேர்ந்த கற்கண்டராஜன் (20) ஆகியோருடன் வெளியூர் சென்றுவிட்டு கமுதி நோக்கி வந்துள்ளனர்.
அய்யனார் கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் நம்புமணி), நவீன்,  கற்கண்டராஜன்  உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர். 
இதில் நம்புமணி மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நவீன் மற்றும் கற்கண்டராஜன் இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது குறித்து கமுதி  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.