தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 8 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2018, 6:59 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தாது மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. இதில் அமைப்பின் மாவட்டச் செயலாளர் என்.ஏ.காதர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சண்முகராஜ் முன்னிலை வகித்தார். இவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் கோஷமிட்டபடி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 8 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.