கமுதி அருகே திங்கள்கிழமை கார் கவிழ்ந்ததில் அதிமுக வட்டச் செயலர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் 5 பேர் காயமடைந்தனர்.
மதுரையில் கோ.புதூர் பகுதியில் வசிப்பவர் முனியசாமி (58). மதுரை 45- ஆவது வட்ட அதிமுக செயலாளரான இவரும் உறவினர்கள் 5 பேரும் மதுரையிலிருந்து சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கரிசல்புளி கிராமத்துக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர்.
சாமி கும்பிட்டுவிட்டு திங்கள்கிழமை காலை மதுரைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை முனியசாமியின் மைத்துனர் கண்ணன் ஓட்டியுள்ளார்.
கமுதி பாம்புல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில், காரில் இருந்த முனியசாமி, கண்ணன், அவரது மனைவி ஆதிலட்சுமி, மகள் முகில்தர்ஷனா, மகன் முகில் தர்ஷன், மருமகன் சபரி ஆகிய 6 பேரும் காயமுற்றனர்.
பலத்த காயமடைந்த கண்ணன் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்ற 5 பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்

ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் பழனிசாமி: சு.வெங்கடேசன் எம்.பி.
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

